உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தோட்டக்குடி பக்க ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்!

தோட்டக்குடி பக்க ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்!

திருவாரூர்: திருவாரூர் அருகே தோட்டக்குடி அருள்மிகு பக்க ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். திருவாரூர் மாவட்டம்,குடவாசல் தாலுகாவில் விர்த்த காவிரி என அழைக்கப்படும் வெற்றாற்றிற்கு வடதிசையில் சோழ சூடாமணி ஆற்றின் தெற்குபக்கம் திருமங்கை ஆழ்வாரால் பாடல் பெற்ற திருப்பதிகளில் ஒன்றான திருக்கண்ணமங்கை திவ்ய தேசத்திற்கும் வடக்கப்பக்கம், நாயன்மார்களால் பாடல் பெற்ற கோவில்களில் முதன்மையானதுமான ஸ்ரீவாஞ்சியம் திருக்கோவிலுக்கும் தென்பக்கம், தோட்டக்குடியில்  பழமை வாய்ந்த அருள்மிகு பக்த ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.

இக்கோவிலில் பக்த ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு வேண்டும் வரங்களை எளிதில் கொடுத்து அருள் பாலிக்கும் ஸ்ரீ பக்த ஆஞ்ச நேயர் சுவாமிக்கு ஜீர்ணோத்தாரணம் செய்யப்பட்டு இன்று (13ம்தேதி) காலை 8 மணியில் இருந்து 10 மணிக்குள் மேஷ லக்னத்தில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதனை முன்னிட்டு கடந்த 11ம்தேதி காலை 8 மணிக்கு ஆலய சுத்யார்த்தம், புண்யாகவாஜனம்,பெருமாள் அனுமர் பரிவார (திருமஞ்னம்) அபிஷேகம் நடந்தது.  மாலை 5 மணிக்கு ஆச்சார்ய அழைப்பு, பகவத் பிரார்த்தனை, யஜமான் அனுக்ஞை, பிள்ளையார் பூஜை சங்கல்பம், ஆச்சார்யவர்ணம், புண்யாக வாஜனம், மிருச்சங்கிருஹணம், அங்குரார்ப்பனம், வாஸ்துசாந்தி ஹோமம், அக்னிபிரதிஷ்ட்டை, கும்ப பூஜை கலாக்கர்ஷணம், யாக சாலை  பிரவேசம் ரஷயபந்தனம், பஞ்ச சூத்ர ஹோமம், பூர்ணாஷூதி ஆராதனம் நடந்தது.

அதன் பின் பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்பட்டது.  12ம் தேதி புண்யாகவாஜனம், ஆராதனம் பூனை, பிம்மசுத்தி அதிவாச ஹோமம், உத்சவர், திருமஞ்சனம், சர்வசாந்தி ஹோமம், பூர்ணாணüதி தீப ஆராத னை நடந்தது.  மாலையில் பல்வேறு பூஜைகளும் 13ம்தேதி புண்யாகவாஜனம், நித்திய ஹோமம், பூர்த்திஹோமம், பூர்ணாஹூதி யாத்ராதானம் மற்றும் நான்காம் கால பூஜை நடந்தது. காலை 8 மணிக்கு கடம் புறப்பாடும், 9.30 மணிக்கு விமானத்தில் புனி நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. காலை 10 மணிக்கு பெருமாள் அனுமார் சம்புரோஷனம், தீப ஆராதனை ஆசிர்வாதம் யஜமான்மரியாதை தஷிணா தானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. இந்த விழாவில் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த ஆயிரகணக்கானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !