கோட்டை முனியப்பன் சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா!
ADDED :4254 days ago
திண்டுக்கல் : திண்டுக்கல் பெரியகோட்டையில் கோட்டை முனியப்பன் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இதைமுன்னிட்டு நடந்த பட்டிமன்றத்தில் வித்யாபார்த்தி பள்ளி ஆசிரியர் தியாகராஜன், மதுரை காமராஜ் பல்கலை பேராசிரியர் கருப்பசாமி, ஆசிரியர்கள் கோவிந்தராஜ், லட்சுமி, மீராபாய், ராஜகோபால் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாட்டை இளைஞர் நலச்சங்கம், ஊர் பொதுமக்களும் செய்திருந்தனர்.