சிதம்பரம் நடராஜர் கோயிலில் ரூ.3 கோடி செலவில் திருப்பணிகள்!
ADDED :4250 days ago
சிதம்பரம்: நடராஜர் கோவிலில்கடந்த 1987-ம் ஆண்டு திருப்பணிகள் நடைபெற்று கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடந்தது. இதனை தொடர்ந்து, தற்போது கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த பொது தீட்சிதர்கள் முடிவு செய்தனர். அதன்படி, கோவிலின் முக்கிய வழியான கிழக்கு கோபுரம் மற்றும் மேற்கு, வடக்கு ஆகிய 3 கோபுரங்களை திருப்பணிகள் தொடங்குவதற்கு பாலஸ்தாப்னம் பூஜை நேற்று முன்தினம் காலை நடந்தது. அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு பால் நைவேத்திய பூஜை முதல் காலசந்தி பூஜை, கோ பூஜை, என சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.