ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் தேரோட்டம்!
ADDED :4207 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழாவின், கடைசி நாளான நேற்று, தேரோட்டம் நடந்தது.இதையொட்டி, காலையில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை செய்யப்பட்டு, தேரில் அம்மன் எழுந்தருளி, நான்கு வீதிகளையும் சுற்றி வர, தேர் நிலையை அடைந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலையில் மஞ்சள் நீராட்டு நடந்தது.