பழநி கோயில் உண்டியலில் 25 நாளில் ரூ.1.77 கோடி வசூல்
ADDED :4571 days ago
பழநி: பழநி மலைக்கோயில், கார்த்திகை மண்டபத்தில், உண்டியல் எண்ணிக்கை நடந்தது. இதில், ரொக்கமாக ஒரு கோடியே 77 லட்சத்து 12 ஆயிரத்து 825 ரூபாயும், தங்கம் 834 கிராம், வெள்ளி 5 ஆயிரத்து 570 கிராம், வெளிநாட்டு கரன்சி 663 ஆகியவை 25 நாட்களில் வசூலாகியுள்ளது. மேலும் தங்கம், வெள்ளியில் செய்யப்பட்ட, தாலி, செயின், பாதம், வேல், ஆள்ரூபம், மோதிரம், கொலுசு, காசுகள் போன்ற பொருட்களும் காணிக்கையாக கிடைத்தன. இணைஆணையர் (பொ) ராஜமாணிக்கம், உதவிஆணையர் மேனகா, திண்டுக்கல் உதவி ஆணையர் ரமேஷ், முதுநிலை கணக்கியல் அலுவலர் பழனிச்சாமி உடனிருந்தனர்.