உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஓசூரம்மன் கோவிலில் யானை, குதிரையை வைத்து பூஜை!

ஓசூரம்மன் கோவிலில் யானை, குதிரையை வைத்து பூஜை!

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் கீழ்பட்டாம்பாக்கம் ஓசூரம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் துவங்கி பிரமோற்சவ விழா நடந்து வருகிறது. தினமும் சிறப்பு அபிஷேகமும், சிங்க, பூத, நாக, யானை, குதிரை வாகனங்களில் அம்மன் வீதி உலாவும் நடக்கிறது. நேற்று வன்னியர்கள் உற்சவத்தை முன்னிட்டு கணபதி ஹோமம் நடந்தது.உலக மக்கள் அமைதியுடனும், வளமாக வாழவும், மழை வேண்டியும் கோபூஜை, கேரளாவில் இருந்து வந்த யானையை வைத்து கஜ பூஜையும், குதிரையை வைத்து அஸ்வமேத யாகமும், தீபாராதனையும் நடந்தது. நெல்லிக்குப்பத்தில் முதன்முறையாக யானை, குதிரையை வைத்து பூஜை நடந்தது. பூஜைகளை நாகராஜ் குருக்கள் செய்தார். வேலு,முருகன், கணேசன் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !