உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலையில் இன்று ஸ்ரீராமநவமி உற்சவம்!

திருமலையில் இன்று ஸ்ரீராமநவமி உற்சவம்!

திருப்பதி: ஸ்ரீராமநவமியை முன்னிட்டு, திருமலையில் இன்று ராமநவமி உற்சவம் கொண்டாடப்பட உள்ளது. திருமலை வெங்கடாஜலபதி கோவிலில் இன்று காலை, 7:00 முதல் 8:00 மணி வரை, ஸ்ரீசீதா ராம லட்சுமணருக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடைபெறும். பின், இரவு, 7:00 மணி முதல் 9:00 மணி வரை, மாட வீதியில் அனுமந்த வாகன சேவையும், இரவு, 10:00 மணி முதல் 11:00 வரை, கோவிலுக்கு உள்புறம் உள்ள தங்க வாசல் அருகில், ஸ்ரீராம நவமி ஆஸ்தானமும் நடைபெற உள்ளது. இதற்காக இன்று ஆர்ஜித சேவைகளான வசந்தோற்சவம், ஸஹஸ்ர தீப அலங்கார சேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. அது போல், திருமலையில் ஆண்டுதோறும் சித்திரை மாத திரயோதசி அன்று துவங்கி பவுர்ணமி அன்று முடிவு பெறும் விதம், மூன்று நாட்கள் வருடாந்திர வசந்தோற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இம்மாதம் 12ல், திருமலையில் வசந்தோற்சவம் துவங்க உள்ளது. மூன்றாம் நாள் சீதா, ராம லட்சுமணரும், ருக்மணி, சத்யபாமா சமேத ஸ்ரீகிருஷ்ணருக்கும் திருமஞ்சனம் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !