உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி விழா

வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி விழா

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திரத்திருவிழாவையொட்டி நாளை திருக்கல்யாணம் நடக்கிறது.
இக்கோவிலின்  62-ம் ஆண்டு பங்குனி உத்திர விழா நேற்று முன்தினம் துவங்கியத. இன்று மாலை  4:30 மணிக்கு பிரதோஷ பூஜை நடக்கிறது. நாளை  (13-ம் தேதி) மாலை  3:00 மணிக்கு கோவில் வளாகத்தில் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. வரும்  14-ம் தேதி காலை 9:00 மணிக்கு நல்லகாத்து ஆற்றில் இருந்து பக்தர்கள் பறவைக்காவடி எடுத்து ஊர்வலமாக வருகின்றனர். அதனை தொடர்ந்து காலை 10:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் விழா நடக்கிறது. ஏற்பாடுகளை முருகன் நற்பணி மன்ற நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !