திண்டிவனம் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் ராம நவமி விழா
ADDED :4232 days ago
திண்டிவனம்; திண்டிவனம் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் ராம நவமி விழா நேற்று நடந்தது. ராம நவமி விழாவின் 6 ம் நாள் உற்சவத்தை முன்னிட்டு மூலவர் சீதா ராமர், லட்சுமணன், அனுமன் ஆகியோருக்கு மஹா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சந்தனகாப்பில் பட்டாபிஷேக அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. உற்சவ மூர்த்திகள் சிறப்பு மலர் அலங்காரத்தில் ஊஞ்சல் சேவையில் அருள்பாலித்தனர். உற்சவதாரர் தொழிலதிபர் பி.ஆர்.எஸ் ரங்கமன்னார் சார்பில் விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு ரூபாய் 200 மதிப்புள்ள ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் புத்தகம் இலவசமாக வழங்கபட்டது. பிரசாதங்கள் வழங்கபட்டது. ஆர்யவைஸ்ய சமூகத்தினர் பலர் கலந்து கொண்டனர்.