உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோரிக்கை நிறைவேற அம்மன் கோவிலில் கூட்டு பிரார்த்தனை!

கோரிக்கை நிறைவேற அம்மன் கோவிலில் கூட்டு பிரார்த்தனை!

சேலம்: கோரிக்கைகள் நிறைவேற, மனுக்களை அம்மனின் பாதத்தில் வைத்து பெண்கள் கூட்டு பிரார்த்தனை நடத்தினர். சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் அறக்கட்டளை சார்பில், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, நேற்று காலை, 11 மணிக்கு பெரிய மாரியம்மன் பாதத்தில் கோரிக்கை மனுவை வைத்து கூட்டு பிரார்த்தனை நடத்தினர். முன்னதாக, வாசவி சுபிட்ஷா ஹாலில் ஒன்று கூடிய பெண்கள், தங்களுடைய கஷ்டங்கள், பிரச்னைகள், குறைகள் மற்றும் கோரிக்கைகளை மனுவாக எழுதினர். அந்த மனுவை ஒரு எவர்சில்வர் தட்டில் வைத்து, அதனுடன் வளையல், மஞ்சள், எலுமிச்சை பழம், வெற்றிலை, பாக்கு, பிரசாதம், குங்குமம், மஞ்சள், வேப்பிலை, என அனைத்தும் வைத்து, வாசவி சுபிட்ஷா ஹாலில் இருந்து புறப்பட்டு, கோட்டை பெரிய மாரியம்மன் கோவிலை வந்தடைந்தனர். அங்கு அம்மன் பாதத்தில், கோரிக்கை மனுக்களை வைத்து பெண்கள் கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !