ஹஜ் பயணிகள் தேர்வு : 21ல் சென்னையில் குலுக்கல்!
ADDED :4215 days ago
சென்னை: "ஹஜ் புனித யாத்திரை செல்லும் முஸ்லிம் பயணிகளை, தேர்வு செய்வதற்கான குலுக்கல், 21ல் சென்னையில் நடக்கிறது. புனித யாத்திரை செல்ல விரும்பி, 13 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். பயணிகளை குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் படி, இந்திய ஹஜ் குழு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, இதற்கான குலுக்கல், 21 காலை 11:30 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, புதுக்கல்லூரியில் நடக்கிறது.