சீதா, லட்சுமண அனுமத் கோவிலில் ராம நவமி உற்சவம்!
                              ADDED :4214 days ago 
                            
                          
                          இராமன்கோவில்: இராமன்கோவிலில் உள்ள, சீதா, லட்சுமண, அனுமத் கோவிலில், ராம நவமி உற்சவம் நடந்து வருகிறது. கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட இராமன்கோவில் கிராமத்தில், சீதா, லட்சுமண, அனுமத் தாசரதி கல்யாணராமன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ராம நவமி உற்சவம் கடந்த, 8ம் தேதி துவங்கி, 10 நாட்கள் நடந்து வருகிறது. ராம நவமி உற்சவத்தின் போது, தினமும் மாலை திருமஞ்சனமும், திருவீதி உலாவும் நடைபெற்று வருகிறது. நேற்று மாலை, சீதா கல்யாணம் நடந்தது. இன்று மாலை, ஸ்ரீராமர் பட்டாபிஷேகமும், நாளை 18ம் தேதி விடையாற்றி உற்சவமும் நடைபெற உள்ளது.