மாகாளியம்மன் கோவில் பூக்குண்டம் திருவிழா!
ADDED :4227 days ago
வால்பாறை : வால்பாறை காமராஜ்நகர் மாகாளியம்மன் கோவில் பூக்குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. வால்பாறை டவுன் காமராஜ் நகர் மகாளியம்மன், கருப்பசாமி கோவிலின் 22ம் ஆண்டு பூக்குண்டம் திருவிழா நேற்றுமுன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் இன்று இரவு 8.00 மணிக்கு நல்லகாத்து ஆற்றிலிருந்து அம்மன்சக்தி கும்பம் அலங்கரித்து, கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது. விழாவில் நாளை (19ம் தேதி) காலை 11.00 மணிக்கு அம்மன் திருக்கல்யாணமும், மதியம் 1.00 மணிக்கு அன்னதானம் வழங்கும் விழாவும் நடக்கிறது. மாலை 3.00 மணிக்கு நல்லகாத்து ஆற்றிலிருந்து பூவோடு எடுத்தும், பறவைக்காவடி எடுத்தும் பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு சென்று, மாலை 6.00 மணிக்கு பூக்குண்டம் இறங்குகின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.