உலக நன்மைக்காக விளக்கு பூஜை
ADDED :4296 days ago
பெரம்பலூர்: பெரம்பலூரில் உள்ள புகழ்பெற்ற மரகதவல்லி தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டு (ஜெய) பிறப்பை முன்னிட்டு பெருமாளுக்கு அபிசேக ஆராதனைகள், சிறப்பு வழிபாடு நடந்தது. இதனை தொடர்ந்து மாலை உலக நன்மைக்காகவும், பருவமழை தவறாமல் பெய்து தனதானியம் பெருகிடவும், மங்களத்திற்காகவும் குத்துவிளக்கு பூஜை நடந்தது.