புவனகிரியில் சுந்தரமூர்த்தி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்!
புவனகிரி: புவனகிரி சுந்தரமூர்த்தி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.புவனகிரி -கடலூர் சாலையில் அமைந்துள்ள சுந்தரமூர்த்தி அம்மன் கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நேற்று காலை 10.15 மணிக்கு நடந்தது. முன்னதாக கோயில் முன்பு வேத விற்பன்னர்களைக் கொண்டு யாகசாலை அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.கணபதி ஹோமம், நவக்கிரஹ பூஜை மற்றும் வாஸ்து சாந்தி நடந்தது. தொடர்ந்து மதல் மற்றும் இரண்டாம் கால யாகசாலை பூஜையும, மகா தீபாராதனையும் நடந்தது. நேற்று காலை 6 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜையும் தொடர்ந்து கடம் புறப்பாடும் நடந்தது. காலை 10:15 மணிக்கு கோயில் கலசத்தில் புனித நீர் ஊற்ற அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகமும் தொடரந்து மகா தீபாராதனையும் நடந்தது. விழாவில் புவனகிரி மற்றும் வெளியூர் களிலிருந்து ஆயிரக்கணக்கில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.