உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரியாங்குப்பம் புவனேஸ்வரி கோவிலில் தெப்பல் உற்சவம்

அரியாங்குப்பம் புவனேஸ்வரி கோவிலில் தெப்பல் உற்சவம்

கிருமாம்பாக்கம்: அரியாங்குப்பம் புவனேஸ்வரி அம்மன் கோவிலில், இன்று தெப்பல் உற்சவம் நடக்கிறது. அரியாங்குப்பம் ராதாகிருஷ்ணன் நகரில் புவனேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் 42ம் ஆண்டு சித்திரை விழா கடந்த 17ம் தேதி துவங்கியது. தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகளும், இரவு சுவாமி வீதியுலாவும் நடந்தது.25ம் தேதி தேர் பவனி, பால் சாகை, செடல் உற்சவம் நடந்தது. இன்று (26ம் தேதி) இரவு 8:30 மணிக்கு தெப்பல் உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் அறங்காவல் குழு மற்றும் அரியாங்குப்பம் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !