அங்காள பரமேஸ்வரி கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்!
ADDED :4149 days ago
விருத்தாசலம்: அங்காள பரமேஸ்வரி கோவிலில் நடந்த ஊஞ்சல் உற்சவத்தில் ஏராளமானோர் தரிசனம் செய்தனர். விருத்தாசலம் சந்தைதோப்பு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், அமாவாசையை யொட்டி, நேற்று முன்தினம் காலை விநாயகர், புற்று மாரியம்மன், அங்காள பரமேஸ்வரி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இரவு 7:30 மணியளவில் அலங்கரித்த வாகனத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் உட்பிரகார வலம் வந்து அருள்பாலித்தார். தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் நடந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.