உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநகரி கல்யாணரெங்கநாதர் கோவிலில் உற்சவம்

திருநகரி கல்யாணரெங்கநாதர் கோவிலில் உற்சவம்

ஆக்கூர்;  நாகை மாவட்டம்  செம்பனார்கோவில் ,  திருநகரி கிராமத்தில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான கல்யாணரெங்கநாதர் கோவிலில்  ஆண்டுதோறும் உடையவர் உற்சவம் கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு கல்யாணரெங்கநாதர் கோவிலில் உடையவர் உற்சவம் நடந்தது. முன்னதாக  சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து பால், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், பழச்சாறு, சந்தனம் மற்றும் வாசனை திரவியங்களைக் கொண்டு அபிசேகம் செய்து அலங்கார, ஆராதனை நடைபெற்றது.. பின்னர் சாற்றுமுறையும், சாமி வீதிஉலாவும் நடந்தது. இதில் செம்பனார்கோவில் மற்றும் அதன்
சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !