அபயபிரதான ரெங்கநாத ஸ்வாமி கோவில் தேரோட்டம்!
ADDED :4202 days ago
கரூர்: கரூர் அபயபிரதான ரெங்கநாத ஸ்வாமி கோவிலில், சித்திரை திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. கரூர் அபயபிரதான ரெங்கநாத ஸ்வாமி கோவிலில் சித்திரை திருவிழாவுக்காக, கடந்த, 5ம்தேதி கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, சிம்ம வாகனம், ஹனுமந்த வாகனம், வெள்ளி கருட வாகன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நேற்று முன்தினம் மாலை, 3.30 மணிக்கு, திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில்,நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். நேற்று காலை, தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, திருத்தேர் வடம் பிடித்து இழுத்தனர். இன்று, அமராவதி ஆற்றில் தீர்த்தவாரி, நாளை ஸ்வாமி பல்லாக்கு புறப்பாடு நிகழ்ச்சிகள் நடக்கிறது.