உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடியில் "பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்!

பரமக்குடியில் "பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்!

பரமக்குடி : பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, நேற்று அதிகாலை 3.30 மணிக்கு பக்தர்களின் "கோவிந்தா கோஷம் முழங்க "கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார். பரமக்குடி சவுராஷ்ட்ஸ்ட்ரா, பிராமன மகாஜனங்களுக்கு பாத்தியமான, சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழா மே 9ல், காப்பு கட்டுதலுடன் துவங்கியது. இதையொட்டி, தினமும் இரவு சுவாமி சிம்மாசனத்தில் எழுந்தருளி ஆடி வீதியில் உலா வந்தார். மே 13ல், காலை 11 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. நேற்று, அதிகாலை 2 மணிக்கு சுந்தரராஜப் பெருமாள் வேல், கம்பு, ஈட்டி, வளரியுடன், கோடாரி கொண்டையிட்டு "கள்ளழகர் திருக்கோலத்துடன் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளினார். தீவட்டிகள் வெளிச்சத்தில், வான வேடிக்கைகள், மேள, தாளம் முழங்க பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு மத்தியில் "கோவிந்தா கோஷத்துடன் அதிகாலை 3.30 மணிக்கு வைகை ஆற்றில் இறங்கினார். நேற்று காலை 9 மணிக்கு பெருமாள் தல்லாகுளத்தில் இருந்து குதிரை வாகனத்தில் அலங்காரமாகி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பீச்சாங்குழல் மூலம் மஞ்சள் நீரை பீச்சியடித்து அழகரை வரவேற்றனர். பின்னர் காட்டுப்பரமக்குடி மஞ்சள்பட்டினம், ஆற்றுப்பாலம், பஜார், எமனேஸ்வரம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக இரவு 10 மணிக்கு காக்காதோப்பு பெருமாள் கோயிலை அடைந்தார். அவ்வமயம் 300 க்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் எழுந்தருளி, மதியம் 2 மணிக்கு ஆயிரம் பொன் சப்பரத்தில் காட்சியளித்õர். இரவு 7 மணிக்கு ஆயிரம் பொன் சப்பரம் வைகை ஆற்று மணலில் 3 கி.மீ., தொலைவில் உள்ள காக்கா தோப்பு பெருமாள் கோவில் வரை பக்தர்கள் இழுத்துச் சென்றனர். விழா ஏற்பாடுகளை தேவஸ்தான மேனேஜிங் டிரஸ்டி அகஸ்தியன், டிரஸ்டிகள் மாதவன், நாகநாதன், கெங்காதரன், கண்ணன் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !