காரைக்குடி கொப்புடையம்மன் கோயில் தேரோட்டம்!
ADDED :4158 days ago
காரைக்குடி : காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோயிலில், செவ்வாய் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. காலை 7.27 மணி முதல் 9 மணிக்குள், அம்பாள் தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது.தொடர்ந்து, பெண்கள் மாவிளக்கு ஏந்தி வழிபாடு நடத்தினர். மாலை 7 மணிக்கு தேரோட்டம் நடந்தது. காட்டம்மன் கோயிலுக்கு அம்பாள் எழுந்தருளினார். இன்று காலை 9 மணிக்கு, காட்டம்மன் கோயிலிலிருந்து, கொப்புடையம்மன் கோயிலுக்கு தேர் திரும்பும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை, இணை ஆணையர் முத்து தியாகராஜன், உதவி ஆணையர் ரோஜாலி சுமதா, செயல் அலுவலர் அய்யர் சிவமணி செய்திருந்தனர்.