திருமலையில் பாதயாத்திரை தரிசனம்: 2 நாட்கள் ரத்து செய்ய முடிவு!
ADDED :4153 days ago
திருப்பதி: திருமலையில், சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில், நடைபாதை தரிசனத்தை ரத்து செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.திருமலையில், கோடை விடுமுறையில் பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர். மேலும், அதனுடன் சனி, ஞாயிறு விடுமுறையும் சேரும் நாட்களில் பக்தர்களின் வருகை அதிக அளவில் உள்ளதால் அந்நாட்களில்பாதயாத்திரை பக்தர்களின் தரிசனத்தை ரத்து செய்ய, தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள்.