வரதராஜ பெருமாள் கோவிலிலிருந்து திருப்பதிக்கு பாத யாத்திரை!
ADDED :4164 days ago
விழுப்புரம்: பஞ்சமாதேவி ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலிலிருந்து திருப்பதிக்கு, பக்தர்கள் குழுவினர் பாதயாத்திரை புறப்பட்டு சென்றனர். விழுப்புரம் அடுத்த பஞ்சமாதேவி கிராமத்திலிருந்து சுப்புராயலு, கண்ணன், ஜானகிராமன் ஆகியோர் தலைமையில் 65 பேர் திருப்பதிக்கு பாதயாத்திரை புறப் பட்டனர். அங்குள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலிலிருந்து பாதயாத்திரை புறப்பட்டது. இக்குழுவினர், வரும் 31ம் தேதி திருமலை சுவாமி தரிசனம் செய்து விட்டு, மீண்டும் பஞ்சமாதேவி திரும்புகின்றனர்.