உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்கால் காளியம்மன் வீதியுலா!

காரைக்கால் காளியம்மன் வீதியுலா!

காரைக்கால்: மேலகாசாகுடி பத்திரகாளியம்மன் கோவிலில் காளியம்மன் வீதியுலா நடந்தது. இக்கோவில் திருவிழா கடந்த 12ம் தேதி துவங்கியது. அன்று அம்மனுக்கு பூச்சொரிதல், சிறப்பு அபிஷேகம் நடந்தது. கடந்த 27ம் தேதி காலை காளியம்மனுக்கு பூ அலங்காரம், காவடி எடுத்தல், மாலையில் கும்ப பூஜை நடந்தது. நேற்று முன்தினம் மாலை சுவாமிக்கு அபிஷேகம், இரவு காளியம்மன் வீதியுலா நடந்தது. வரும் 3ம் தேதி விடையாற்றி உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !