தொட்டிக்குப்பத்தில் தீமிதி உற்சவ விழா!
ADDED :4157 days ago
விருத்தாசலம்: தொட்டிக்குப்பம் எல்லையம்மன் கோவிலில் தீ மிதி உற்சவத்தில், ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விருத்தாசலம் அடுத்த தொட்டிக்குப்பம் திரவுபதியம்மன், மாரியம்மன் கோவில் தீமிதி உற்சவம் கடந்த 13ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடந்தது. முக்கிய நிகழ்வாக நேற்று தீமிதி உற்சவத்தையொட்டி, மாலை 5:00 மணியளவில் ஏராளமான பக்தர்கள் ஊர்வலமாக வந்து தீக்குண்டத்தில் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏராளமானோர் தரிசனம் செய்தனர். இரவு திரவுபதி அம்மன், மாரியம்மன் வீதியுலா நடந்தது.