உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் வைகாசி விழா துவக்கம்

சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் வைகாசி விழா துவக்கம்

சிங்கம்புணரி : சிங்கம்புணரி, சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில், 10 நாட்கள் வைகாசி திருவிழா, காப்பு கட்டுதல், கொடியேற்றத்துடன் துவங்கியது. வைகாசி விழாவை முன்னிட்டு,நேற்று பகல் 2:30க்கு, சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, பிடாரி அம்மன், சேவுகபெருமாள் ஐயனார் சன்னதியில் உள்ள கம்பத்தில் கொடியேற்றினர். பின்னர், சுவாமிக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. விநாயகர், பூரணை, புஷ்கலா சமேத சேவுகப்பெருமாள் சுவாமி, பிடாரி அம்மன் எழுந்தருதல்,வெள்ளி வாகனங்களில் திருவீதி உலா,ஜுன் 5ல் சுவாமி திருக்கல்யாணம்,6 ல் சமணர் கழுவேற்றம்,9 ல் தேரோட்டம்,பத்தாம் நாள் புஷ்ப பல்லக்கு விழா நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !