வரமூர்த்தீஸ்வர் கோவில் பிரம்மோற்சவம் இன்று துவக்கம்
ADDED :4258 days ago
கும்மிடிப்பூண்டி : அரியதுறை வரமூர்த்தீஸ்வரர் கோவிலில், வைகாசி மாத பிரம்மோற்சவ திருவிழா, இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. கவரைப்பேட்டை அருகே, அரியதுறை கிராமத்தில், மரகதவள்ளி சமேத வரமூர்த்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், இன்று கொடியேற்றத்துடன் வைகாசி மாத பிரம்மோற்சவம் துவங்குகிறது. முக்கிய நிகழ்வான, திருக்கல்யாணம் வருகிற 6ம் தேதி மாலையும், 8ம் தேதி காலை தேர் திருவிழாவும், 12ம் தேதி மாலை, விடையாற்றி உற்சவமும் நடைபெற உள்ளது.