பரிகாரம் செய்வது ஏன்?
ADDED :4258 days ago
மனிதனுடைய மனமே எல்லாவற்றிற்கும் காரணம். ஜோதிட ரீதியாக ஒருவருக்கு நேரம் சரியில்லை என்று தெரிந்து விட்டால் மனம் படாத பாடு படும். அவர் மனம் அமைதி பெற பரிகாரம் செய்வது ஒன்றே வழி. அவரிடம், படைத்தவன் பார்த்துக் கொள்வான் என்ற வேதாந்த பேச்சு எடுபடுவதில்லை. இயல்பாகவே,எல்லாம் கடவுளுக்குத் தெரியும் என்ற பக்குவ எண்ணம் படைத்தவர்கள் ஜோதிடம் பக்கமே வருவதில்லை. பக்குவப்பட்டவர்களுக்கே இந்த நிலை பொருந்தும்.