வில்லிவாக்கம் அகஸ்தீஸ்வரர் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் துவக்கம்!
ADDED :4152 days ago
வில்லிவாக்கம் : வில்லிவாக்கம் அகஸ்தீஸ்வரர் கேவிலில், நேற்று புண்யாஹவாசம், கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் துவங்கின. வில்லிவாக்கத்தில் உள்ள அகஸ்தீஸ்வரர் கோவில், இந்து சமய அறநிலைய துறை நிர்வாகத்தில் உள்ளது. அங்கு, வரும், 8ம் தேதி காலை, 11:00க்கு மேல், 12:00 மணிக்குள் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு, நேற்று காலை, 9:00 மணிக்கு, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசம், கணபதி ஹோமம் ஆகியவை துவங்கின. நாளை காலை, மிருத்சங்கிரஹணம், அங்குரார்ப்பணம், அக்னி ஸங்கிரஹணம், யாகசாலை நிர்மாணம் ஆகியவை நடக்க உள்ளன.