உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயிலில் திருக்கல்யாணம்!

சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயிலில் திருக்கல்யாணம்!

சிங்கம்புணரி : சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி திருவிழாவின் ஐந்தாம் நாள் சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ஜூன் 1 ல் காப்புகட்டுதலுடன் பத்துநாள் திருவிழா துவங்கியது. ஐந்தாம் நாள் இரவு கோயிலில் யாகசாலை,சிறப்பு பூஜை, மஹந்யாச ஜெபம், அஸ்த்ர தேவர் சீர்வருதல் நிகழ்ச்சி நடந்தது. சேவற்கொடியோன்,சின்னையா சிவாச்சாரியார் தலைமையில் வேதமந்திரங்கள் முழங்க மாலை மாற்றுதல்,சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. மகாமண்டப ஊஞ்சலில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவுஅனந்தசயனம் வாகனத்தில் சுவாமி திருவீதிஉலா, கலை, இசை நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !