கவுரவம் பார்த்தாஜெயிக்க முடியாது!
ADDED :4238 days ago
ஒருசமயம், இந்திரனின் பதவியைப் பறிக்க அசுரர்கள் முயற்சித்தனர். அவன் விஷ்ணுவைச் சரணடைந்தான். விஷ்ணு அவனிடம், அசுரனான மகாபலியிடம் போய் கேள். பதவி நிலைக்கும். இரக்க குணம் அவனிடம் இருக்கிறது என்றார். ஆனால், ஒரு அசுரனிடம் யாசகம் கேட்பதா? என யோசித்தான் இந்திரன். ஒரு செயலில் வெற்றி பெற வேண்டுமானால், கவுரவம் பார்த்தால் பயனில்லை என்பதை இந்திரனுக்கு உணர்த்த, விஷ்ணு வாமன அவதாரம் எடுத்து புறப்பட்டார். யாகம் நடத்திக் கொண்டிருந்த மகாபலியிடம் மூன்றடி நிலத்தை யாசகமாகக் கேட்டார். எல்லா உலகங்களையும் தனதாக்கிக் கொண்டார். தன்னையே தானமாக தர முன் வந்த மகாபலிக்கு சொர்க்கவாழ்வும் அளித்தார்.