நாகமுத்து மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக நிறைவு விழா!
ADDED :4176 days ago
நாகமுத்து மாரியம்மன் கோவிலில் முதலாம் ஆண்டு கும்பாபிஷேகநிறைவு விழா நடந்தது. நைனார் மண்டபத்தில் நாகமுத்து மாரியம்மவ் கோவில் திருப்பணிகள் முடிவடைந்து, கடந்தாண்டு மே மாதம் கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டது. கும்பாபிஷேகம் முடிந்து ஓராண்டு நிறைவு பெற்றுள்ளதையொட்டி, முதலாம் ஆண்டு விழா நேற்று நடந்தது. காலை 10.00 மணிக்கு ஹோமம், மகா பூர்ணாஹூதி நடந்தது. இதன் தொடர்ச்சியாக மகா அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் பழனிசாமி மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.