குருபகவான் கோயிலில் தவக்கோல உற்சவம்
ADDED :4182 days ago
குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் சுயம்பு குருபகவான் கோயில் தவக்கோலம் உற்சவம் நடந்தது.இங்கு ஜூன் 13ல் மாலை 6.03 மணிக்கு மிதுனம் ராசியில் இருந்து கடகம் ராசிக்கு குருபகவான் இடபெயர்ச்சியாகிறார். இதைமுன்னிட்டு, நேற்று காலை 10 மணிக்கு கோயிலில் தவக்கோல உற்சவம் நடந்தது. ரங்கநாதபட்டர் தலைமையில் ஸ்ரீதர், சடகோபால பட்டர் குழுவினர் வேதம் முழங்க குருபகவானுக்கு பரிவட்டம் கட்டி, பல்வேறு அபிஷேகம், தீபாராதனைகள் நடத்தினர். அன்னதானம் வழங்கப்பட்டது. கோயில் நிர்வாக அதிகாரி சுமதி, ஊழியர்கள் வெங்கடேசன், நாகராஜன் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.