சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயிலில் தேரோட்டம்!
ADDED :4134 days ago
சிங்கம்புணரி : சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசிவிசாக திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது.கடந்த 1ல்,காப்புகட்டுதலுடன் விழா துவங்கியது. தினமும் யாக சாலை பூஜை, மூலவருக்கு அபிஷேகம்,ஆராதனை நடந்தது. ஒன்பதாம் நாளான நேற்று காலை சிவகங்கை தேவஸ்தான கண்காணிப்பாளர் பழனிகுமார் முன்னிலையில் கோயில்பூஜகர்கள் தேரடி பூஜை செய்தனர். பிற்பகல் சந்திவீரன் கூடத்திலிருந்து முன்னாள் எம்.எல்.ஏ.,அருணகிரி தலைமையில் சிங்கம்புணரி கிராமத்தார் கோயிலுக்கு வந்து சாமி கும்பிட்டு மாலை 4 மணிக்கு தேரோட்டத்தை துவக்கினர். விநாயகர்,பிடாரி அம்மன் சப்பரத்திலும் ,பூரணை,புஷ்கலை சமேத சேவுகப்பெருமாள் ஐயனார் பெரிய தேரிலும்தேரோடும் வீதியில் பவனி வந்தனர்.பக்தர்கள் தேங்காய்களை தேரடிமேடையில் வீசி நேர்த்தி செலுத்தினர்.