உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வத்திராயிருப்பு ஆற்றங்கரை பிள்ளையார் கோயில் கும்பாபிஷேகம்!

வத்திராயிருப்பு ஆற்றங்கரை பிள்ளையார் கோயில் கும்பாபிஷேகம்!

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு ஆற்றங்கரை பிள்ளையார் கோயில் கும்பாபிஷேக விழா விமரிசையாக நடந்தது. முதல்நாள் கணபதி ஹோமம்,  விக்னேஸ்வர பூஜை, எஜமான அனுக்ஞ்சையுடன் யாகபூஜைகள் துவங்கின. 2ம் நாள் ரக்ஷாபந்தனத்துடன் கும்பாபிஷேகம் துவங்கியது.  நாடிசந் தனம், யாத்ரா கானம் முடிந்தவுடன் பூஜிக்கப்பட்ட கும்பநீரை சிவாச்சார்யார்கள் சுமந்தபடி கோயிலை வலம் வந்து மூலவருக்கு அபிஷேகம் செய்தனர். பக்தர்கள் பூக்களை தூவியபடி வணங்கினர்.  பின்னர் பிள்ளையாருக்கு ராஜஅலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அன்னதானம் நடந்தது.  சேதுசுந்தரப்பட்டர், காமேஸ்வரப்பட்டர் குழுவினர் பூஜைகள் செய்தனர்.பக்தசபா நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !