உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமநாதபுரம் பாலசுப்ரமணியசுவாமி கோயிலில் திருவிளக்கு பூஜை!

ராமநாதபுரம் பாலசுப்ரமணியசுவாமி கோயிலில் திருவிளக்கு பூஜை!

ராமநாதபுரம் : ராமநாதபுரம் வெளிபட்டணம் பாலசுப்ரமணியசுவாமி கோயிலில், வைகாசி விசாக திருவிழவை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை நடந்தது. ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். உலக நன்மை, அமைதி வேண்டி சிறப்பு பூஜை, கூட்டு வழிபாடு நடந்தது. ஏற்பாடுகளை வைகாசி விசாக வழிபாட்டு குழுவினர் செய்தனர். வெளிபட்டணம் தாயுமானசுவாமி தபோவனத்தில் மாதாந்திர விசாக வழிபாடு நடந்தது. மாலையில் நாமாவளி, பாராயணம், பஜனை நடந்தது. சுவாமி பரானந்த மகராஜ் தலைமை வகித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !