கன்னிமார் கருப்பண்ணசுவாமி கோவில் கும்பாபிேஷகம்!
ADDED :4226 days ago
பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த ஆர்.பொன்னாபுரத்தில், நூற்றாண்டுகள் பழமையான கன்னிமார் கருப்பண்ணசுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் சமீபத்தில் பொதுமக்களால் புதுப்பித்து கட்டப்பட்டது. அதை தொடர்ந்து கடந்த வாரம் கணபதி ேஹாமம் மற்றும் நவக்கிரக ேஹாமம் ஆகியவை நடத்தப்பட்டன. தொடர்ந்து யாக பூஜைகள், நவக்கிரக பிரதிஷ்டை நடந்தன. அடுத்து கோபுர விமானம், மூலவிக்ரகம் ஆகியவற்றிற்கு கும்பாபிேஷகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். கும்பாபிேஷகத்தை தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டலபூஜை நடைபெற்று வருவதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.