உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அழகம்மன் சுந்தரேஸ்வரர் கோயிலில் ஜூன் 29-ல் கும்பாபிஷேகம்!

அழகம்மன் சுந்தரேஸ்வரர் கோயிலில் ஜூன் 29-ல் கும்பாபிஷேகம்!

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் வடிவீஸ்வரம் அழகம்மன் சுந்தரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் ஜூன் 29-ல் நடக்கிறது. இக்கோயில் திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் கட்டப்பட்ட நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது. 24 ஆண்டுகளுக்கு பின் தற்போது கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. தேவபிரஸ்ன விதிப்படி தெற்கு நுழைவு வாயிலில் ராஜகோபுரம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இந்த கோபுரத்தை தினமலர் குடும்பத்தினர் கட்டிக்கொடுத்துள்ளனர். நாளை காலை 6 மணிக்கு தொடங்கும் யாகசலை பூஜைகள் 28-ம் தேதி இரவு வரை நடைபெறுகிறது. 29-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அன்று காலை 4 மணிக்கு 4-ம் கால யாக சாலை பூஜை தொடங்குகிறது. 5.30-க்கு பரிவார யாகசாலை பூர்ணாகுதி, 6 முதல் 7 மணிக்குள் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. 8 மணிக்கு கடம் யாக சாலையிலிருந்து புறப்படுகிறது. 8 முதல் 8.30மணிக்குள் ராஜகோபுரம், மூஸ்தான விமானம் மற்றும் பரிவார கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. 8.45 மணிக்கு மூலஸ்தான மூர்த்திக்கு கும்பாபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடக்கிறது. 10 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. மாலை 6.30- க்கு சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினரும், தேவசம்போர்டு அதிகாரிகளும் இணைந்து செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !