உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு!

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு!

விருத்தாசலம்,  பிரதோஷத்தை யொட்டி,விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்குசிறப்பு வழிபாடு நடந்தது.விருத்தாசலம் விருத்தாம்பிகை, பாலாம்பிகைஉடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி ஆழத்து விநாயகர், விருத்தகிரீஸ்வரர்,தாயார், சுப்ரமணியர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.மாலை 4:30 மணியளவில்நந்தி பகவானுக்குபால், தயிர், சந்தன ம், மஞ்சள், பன்னீர் போன்ற 12சிறப்பு பொருட்களால்சிறப்பு அபிஷேகம், அருகம்புல் மாலைகள் சாற்றி,தீபாராதனை நடந்தது.சிறப்பு அலங்காரத்தில் நந்தி பகவான் அருள்பாலித்தார்.ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !