மூங்கில்துறைப்பட்டு ஆலய கொடியேற்றம்!
ADDED :4126 days ago
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள அருளம்பாடி புனித ராயப்பர் சின்னப்பர் ஆலயத்தில் நேற்று முன் தினம் கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. அருளம்பாடியில் உள்ள புனித ராயப்பர் சின்னப்பர் ஆலயத்தில் நேற்று முன் தினம் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அருட்தந்தை லூர்துசாமி தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் பிரான்சிஸ் முன்னிலை வகித்தார். வரும் 29ம் தேதி தேர் திருவிழா நடக்கிறது.