ஆனி அமாவாசை: அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடல்!
ADDED :4484 days ago
ராமேஸ்வரம்: ஆனி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு நேற்று ஏராளமான பக்தர்கள் வந்தனர். அக்னி தீர்த்த கடற்கரையில், முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டி, திதி பூஜை செய்து, கடலில் நீராடினர். பின்னர் கோயிலில் 22 தீர்த்தங்கள் நீராடி, சுவாமி, அம்மனை நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.