உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராகவேந்திரர் கோவிலில் 7ம் ஆண்டு விழா யாகம்!

ராகவேந்திரர் கோவிலில் 7ம் ஆண்டு விழா யாகம்!

புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் சிறப்புயாகம் நடந்தது.புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் அமைந்துள்ள மிருத்திகா பிருந்தாவனத்தின் 7ம்ஆண்டு தொடக்க விழாவையொட்டி, ராகவேந்திரர் படம் மலர்களால்அலங்கரிக்கப்பட்டுவேத விற்பன்னர்களைக்கொண்டு சிறப்புயாகம் நடந்தது.நரசிம்ம ஆச்சார்தலைமையில்ரகோத்தம ஆச்சார்,ரமேஷ்ஆச்சார்யார்கள் உள்ளிட்டோர் சிறப்புயாகத்தை நடத்தினர்.தொடர்ந்து, வேதவிற்பன்னர்கள் யாகம்செய்த குடங்களைஎடுத்துச் சென்று மிருத்திகாபிருந்தாவனத்திற்குமகா அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனைசெய்யப்பட்டது. பக்தர்களுக்கு கடலூர் ஆறுமுகம் குடும்பத்தினர் சார்பில் அன்னதானம்வழங்கப்பட்டது.விழாவில், புவனகிரிமற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில்இருந்து ஏராளமானபக்தர்கள் சுவாமிதரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !