உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி அமாவாசைக்காக.. காசிக்கு ஏசி சிறப்பு ரயில்!

ஆடி அமாவாசைக்காக.. காசிக்கு ஏசி சிறப்பு ரயில்!

ஆடி அமாவாசைக்காக, காசிக்கு, ஏசி சிறப்பு ரயிலை, இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் - ஐ.ஆர்.சி.டி.சி., இயக்குகிறது.ஐ.ஆர்.சி.டி.சி., தென் மண்டல உதவி பொது மேலாளர் ரவிக்குமார் கூறியதாவது: ஆடி அமாவாசைக்காக வரும், 23ம் தேதி, பெங்களூரில் இருந்து புறப்படும், ஏசி சிறப்பு ரயில், மாலை, 4:30 மணியளவில், சென்னை சென்ட்ரலை வந்தடைந்து, காசி, கயா, அலகாபாத் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எட்டு நாட்கள் சுற்றுலாவாக அமையும் இந்த யாத்திரையில், காசியில், சோமாவார சிவ தரிசனம்; ஆயில்ய நட்சத்திர சிறப்பு சர்ப்ப பூஜை; கயாவில், பல்குணி நதிக்கரையில், முன்னோருக்கு பிண்டம் பிரதானம் செய்தல்; அலகாபாத், திரிவேணி சங்கமத்தில், நடக்கும் பூஜையில் பங்கேற்கும் வகையில், சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ரயிலில், லக்சரி, டீலக்ஸ், கம்பர்ட் வசதி கள் உள்ளன. பயணக் கட்டணம், 23,949 ரூபாயில் துவங்குகிறது.ஏசி ரயிலில் பயணம், தரிசன பகுதிகளில், ஏசி பஸ், மூவர் தங்கும் வசதி உள்ள, ஏசி அறை, தென்னிந்திய சைவ உணவு ஆகியவை கட்டணத்தில் அடங்கும். தொடர்புக்கு, 9003140681 என்ற மொபைல் போன் எண்ணை அழைக்கலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !