திருப்பரங்குன்றம் கோயிலில் 25 ஆண்டுகளுக்கு பின்பு பிரசாதம் விற்பனை!
ADDED :4116 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 25 ஆண்டுகளுக்கு பின்பு கோயில் நிர்வாகம் பிரசாதம் விற்பனையை நேற்று துவங்கியது. சர்க்கரை பொங்கல், புளியோதரை, உளுந்த வடை தலா ரூ.10க்கு விற்கப்படுகிறது. வரும் நாட்களில் லட்டு, அப்பம், தேன்குழலும் விற்கப்படவுள்ளது. நேற்று சுவாமி சன்னதிகளில் பிரசாதங்கள் படைக்கப்பட்டு விற்பனை துவங்கியது. துணை கமிஷனர் பச்சையப்பன், கண்காணிப்பாளர் பால லட்சுமி, கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதற்கு முன் இந்த விற்பனையை ஏலம் எடுத்து தனியார் நடத்தினர். இதில் சில குளறுபடிகள் ஏற்பட்டதை தொடர்ந்து கோயில் நிர்வாகமே விற்க ஆரம்பித்துள்ளது.