உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விவேகானந்தர் நினைவு தினம் அரிசியை குவித்து மகா அன்னபூஜை!

விவேகானந்தர் நினைவு தினம் அரிசியை குவித்து மகா அன்னபூஜை!

நாகர்கோவில்: சுவாமி விவேகானந்தரின் நினைவு தினத்தையொட்டி கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் மகா அன்னபூஜை நடைபெற்றது.சுவாமி விவேகானந்தர் 1902 ஜூலை 4-ம் தேதி மகா சமாதி அடைந்தார். அவர் மகா சமாதி அடைந்து 112 வருடம் ஆவதையொட்டி நேற்று கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரத்தில் கிராம முன்னேற்ற திட்டம் சார்பில் விவேகானந்தா கேந்திர அரங்கில் அன்ன பூஜை நடந்தது. இதற்காக நெல்லை, குமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து நன்கொடையாக சேகரிக்கப்பட்ட 20 டன் அரிசியை மலைபோல் குவித்து வைத்து அன்ன பூஜை நடந்தது.மேலும் ஆதி சங்கரர் அருளிய அன்ன பூரண சோஸ்திரம், பகவத் கீதை விசுவரூப தரிசனம் ஓதப்பட்டது. தொடர்ந்து பெண்கள் குத்துவிளக்கேற்றினர். விவேகானந்தா கேந்திர கிராம முன்னேற்ற திட்ட செயலாளர் அய்யப்பன் அன்ன பூரண பூஜை பற்றி விளக்கி பேசினார்.தொடர்ந்து தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் பகவத் கீதை, விசுவரூப தரிசனம் நடந்தது. பின்னர் அன்ன பூஜை அரிசியை கேந்திராவுக்கும், பல்வேறு அமைப்புகள் நடத்தும் ஆசிரமங்களுக்கும் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.இந்த பூஜைக்கு விவேகானந்தா கேந்திர துணை தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கேந்திர நிர்வாக செயலாளர் மற்றும் பொருளாளர் அனுமந்த ராவ், ஆயுள் கால தொண்டர் கிருஷ்ணமூர்த்தி, மக்கள் தொடர்பு அதிகாரி ரகுநாதன் நாயர், நிர்வாக அதிகாரி கிருஷ்ணசாமி உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !