உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆலங்குடிசுவாமி

ஆலங்குடிசுவாமி

ஆலங்குடி பெரியவாள் என போற்றப்படும் சுயம்பிரகாசானந்த சரஸ்வதி சுவாமியின் 79வது ஆராதனை விழா, திருவாரூர் அருகிலுள்ள முடிகொண்டான் கிராமத்தில் நாளை தொடங்குகிறது. வேதத்தின் சாரமான பாகவதத்தின் பெருமையை உலகறியச் செய்த இவர், 1935, வைகாசி சுக்ல சதுர்த்தசியன்று நரசிம்ம ஜெயந்தி நாளில் ஸித்தியடைந்தார். இவரின் அதிஷ்டானம்(சமாதி) மயிலாடுதுறை- திருவாரூர் ரோட்டிலுள்ள முடிகொண்டானில் உள்ளது.  இங்குள்ள ராதிகா ரமண வேணுகோபாலசுவாமி, குருநாதர் சந்நிதியில் நடக்கும் பாகவத பாராயணம் மற்றும் கோசாலை பராமரிப்பு ஆகியவற்றில் பக்தர்கள் பங்கேற்கலாம். போன்: 04366- 230 142.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !