உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பணக்கார அந்தஸ்து பெற்ற குக்கே சுப்ரமண்யா கோவில்!

பணக்கார அந்தஸ்து பெற்ற குக்கே சுப்ரமண்யா கோவில்!

பெங்களூரு:  பரிகார தலமாக விளங்கும், குக்கே சுப்ரமண்யா கோவில், அதிகமான நன்கொடை, காணிக்கை பெற்றதின் மூலம், பணக்காரக் கோவில்  என்ற பெருமையை பெற்றுள்ளது. கர்நாடகா மாநிலத்தின், அறநிலையத் துறையின் கோவில்கள் பட்டியலில், 12 கோவில்கள், பணக்கார அந்தஸ்தை  பெற்றுள்ளன. இதில், தட்சிண கன்னடா மாவட்டத்தின், குக்கே சுப்ரமண்யா கோவில், முதலிடத்தில் உள்ளது. 2013ல், 66.76 கோடி ரூபாய் வரு மானம் கண்டுள்ளது. இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தில் முறையே, சாம்ராஜ் நகர் மாவட்டத்தின் மலை மஹாதேஸ்வரா, கொல்லுாரின் மூகாம் பிகை கோவில்கள் உள்ளன. மாநிலம் முழுவதும் உள்ள பிரபலமான, புராதன கோவில்களில், 2012- – 2013ம் ஆண்டு மொத்தம், 242 கோடி வரு வாய் கிடைத்துள்ளது. இவற்றில், நாற்பதுக்கும் மேற்பட்ட கோவில்கள், ஆண்டுதோறும், ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான வருவாய் பெறுகின்றன. இத்துடன், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளும், கோவில்களுக்கு காணிக்கையாக வருகின்றன. ஆண்டுக்கு ஆண்டு கோவில்களின்  வருவாய் அதிகரித்து வருவதாக, அறநிலையத் துறை அறிவித்துள்ளது.

பணக்கார கோவில்களின் வருவாய் ரூ. கோடியில்

தட்சிண கன்னடா, குக்கே சுப்ரமண்யா-    66.76
சாம்ராஜ் நகர், மலை மஹாதேஸ்வரா-     35.20
உடுப்பி, கொல்லுார் மூகாம்பிகை    23.53
மைசூரு, சாமுண்டீஸ்வரி-        14.20
கண்டேஸ்வரர்            13.38
கட்டீல் துர்கா பரமேஸ்வரி-        12.85
பெல்காம் சவதத்தி ரேணுகா எல்லம்மா-    10.94
கொப்பால் ஹூலிகெம்மா          5.81
தும்கூர், எடியூரு சித்தலிங்கேஸ்வரா-      5.77
உடுப்பி, மந்தர்தி துர்கா பரமேஸ்வரி-      5.64
பெங்களூரு, பனசங்கரி-          5.59
உத்தரகன்னடா, சர்சி மாரிகாம்பா-          4.12


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !