உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்வ விநாயகர் கோவிலில் 1008 சங்கு பூஜை

செல்வ விநாயகர் கோவிலில் 1008 சங்கு பூஜை

புதுச்சேரி: வலம்புரி செல்வ விநாயகர் கோவிலில், 1008 சங்கு பூஜை நடந்தது. கதிர்காமம் தொகுதி,  விவேகானந்தா நகரிலுள்ள  வலம்புரி செல்வ  விநாயகர் கோவிலின் நான்காம் ஆண்டு கும்பாபிஷேக விழா , கடந்த 12ம் தேதி கணபதி பூஜையுடன்  துவங்கியது. நேற்று காலை 6.00 மணியளவில்  கோபூஜை, அஸ்வபூஜை, கன்னியா பூஜை நடந்தது. காலை 8.00 மணியளவில் 1008 சங்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து  கொண்டனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !