உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா!

வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா!

காரிமங்கலம்: காரிமங்கலம் அடுத்த, பூனாத்தனஹள்ளி புதூர், வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. கடந்த 7ம் தேதி கணபதி பூஜை, கங்கை பூஜை, முதல் கால யாக பூஜை, 8ம் தேதி இரண்டாம் கால யாக பூஜை, மூன்றாம் கால யாக பூஜை, அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடந்தது. அதை தொடர்ந்து, நான்காம் கால யாக பூஜை மற்றும் கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர், விநாயகருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரம், பூஜைகள், தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !