உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) அபார ஆற்றல்!

துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) அபார ஆற்றல்!

நேர்மையுடன் செயலாற்றிடும் துலாம் ராசி அன்பர்களே!

மாதத்தின் பிற்பகுதியில் நற்பலனைக் காணலாம். ஜூலை 23க்கு பிறகு புதன் சாதகமான இடத்திற்கு வருகிறார். அதேபோல் சுக்கிரன்ஆக.8 வரை நன்மை தருவார். சூரியன்,கேது மாதம் முழுவதும் நன்மை தர காத்திருக்கின்றனர். நினைத்த காரியம் நிறைவேறும். பொருளாதார வளம் அதிகரிக்கும். பகைவர் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். அபார ஆற்றல் பிறக்கும். நகை-ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டுக்கு தேவையான வசதி அனைத்தும் கிடைக்கும். தம்பதியிடையே அன்பு நீடிக்கும். ஆக. 8 க்கு பிறகு பெண்களால் நன்மை உண்டாகும். பொன், பொருள் சேரும். பிள்ளைகள் உடல்நலனில் சற்று அக்கறை காட்ட வேண்டியதிருக்கும்.

தொழில், வியாபாரத்தில் அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். பகைவர்கள் வகையில் எச்சரிக்கை அவசியம். ஜூலை 23 க்கு பிறகு லாபம் அதிகரிக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட தொழில் அதிக வருவாயை காணும். எதிரிகளை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள்.

பணியாளர்களுக்கு மாத தொடக்கத்தில் பிரச்னை நேர்ந்தாலும், பிற்பகுதியில் நன்மை மேலோங்கும். ஜூலை 23 க்கு பிறகு பின்தங்கிய நிலை மாறி முன்னேற்ற பலன்கள் நடக்கும். அதிகாரிகள் அனுசரணையாக நடந்து கொள்வர். நீண்ட நாள் கோரிக்கை கூட நிறைவேற வாய்ப்புண்டு. சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர்.

கலைஞர்கள் திருப்தியான பலன் காண்பர். மாத பிற்பகுதியில் முயற்சி எடுத்தே புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர்.

அரசியல்வாதிகள் எதிர்பார்த்த நன்மை அடைவர். ஆக. 8க்கு பிறகு போட்டி அதிகம் இருக்கும். அவப்பெயர் ஏற்படலாம் கவனம்.

மாணவர்கள் பிற்போக்கான நிலையில் இருந்து விடுபடுவர். ஜூலை 23க்கு பிறகு புதன் சாதகமான இடத்திற்கு வருவதால் மேன்மை காண்பர். மதிப்பெண் அதிகரிக்கும்.

பெண்கள் கணவர், குடும்பத்தாரின் நன்மதிப்பை பெறுவர். பணிச்குச் செல்லும் பெண்கள் நல்ல வளர்ச்சி காண்பர். அடிக்கடி விருந்து, விழா என சென்று மகிழ்வீர்கள்.

நல்ல நாள்: ஜூலை 17, 18, 19, 20, 21, 26, 27,  28, 29, 30  ஆக. 3, 4, 7, 8, 14, 15, 16

கவன நாள்:  ஜூலை  22, 23

அதிர்ஷ்ட எண்: 2,7                              நிறம்: மஞ்சள், சிவப்பு

வழிபாடு: வியாழக்கிழமை தட்சணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்து கொண்டை கடலை தானம் செய்லாம். நாக தேவதையை வணங்குங்கள். முருகன் கோயிலுக்கு சென்று வாருங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !